vasiyam seivathu eppadi - vasiyam - manthrigam


கணவன் - மனைவி இடையே சந்தேகமா? அன்பும், பாசப் பிணைப்பும்  அதிகரிக்க வழி :




vasiyam seivathu eppadi - vasiyam - manthrigam



கணவன் மனைவி இடையே இருக்கும் சந்தேக பிரச்னையை தீர்க்கவும், குடும்பத்தில் எந்த ஒரு பிரச்னையும் அண்டாமல் தம்பதிகளுக்கிடையே அன்பும், பாசப் பிணைப்பு அதிகரிக்க சித்தர்கள் சொன்ன எளிய வசிய முறையை பார்க்கலாம்.


சமூகத்தில் பலரும் விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்திற்குச் செல்லும் இந்த காலத்தில், விவாகரத்திற்கு மிக முக்கியமாக அமைவது கணவன் மனைவி இடையே யாரேனும் ஒருவர் மற்றொருவர் மீது சந்தேகம் கொள்வதால் ஏற்படுகிறது.

 தம்பதிகளுக்கிடையே சந்தேக பிரச்னையை தீர்க்கவும், கணவன் - மனைவி உறவு மேம்படச் சித்தர்கள் சொன்ன வசிய முறைகள் என்ன என்பதை பார்த்து வருகிறோம்.

சர்க்கரை மூலம் வசியம் செய்வது எப்படி ? அறிந்து கொள்ள


இன்று நாம் பார்க்க போவது சந்தேகம் என்ற நோய் நீங்கி தம்பதிகள் அன்யோன்யமாக வாழ என்ன வழி என்பதைத்தான்.

தற்போது சமூகத்தில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது குடும்ப உறவு பிரச்னை. பல காதல் ஜோடிகள் கூட சில நேரங்களில் ஒருவரை ஒருவர் சந்தேகப்படக் கூடிய நிலை ஏற்பட்டு அதனால் குடும்ப பிரிவு ஏற்படக் கூடிய பெரிய பிரச்னை ஏற்படுகிறது.

திருமண பந்தம் எனும் வண்டி என்பதே நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல் எனும் சக்கரத்தின் மீது தான் பயணிக்கிறது. இப்படி பயணிக்க பயணிக்க ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும், அக்கறையும் அதிகரித்து அந்நியோன்னியம் உண்டாகும்

நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் - மனைவி இடையே சந்தேகம் எனும் பாம்பு புகுந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை சிதறிப்போகும்.

ஒரு பெண்ணால் ஆணுக்கும், ஒரு ஆணால் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய சிறு தொந்தரவால், கணவன்- மனைவி இடையே சந்தேகம் ஏற்படக் கூடிய நிலையால் குடும்பம் பிரியக் கூடிய மோசமான நிலை ஏற்படலாம்.

குடும்ப பிரச்னை தீரவும், தம்பதிகளுக்கிடையேயான சந்தேகம் நீங்கி ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன் வாழ சித்தர்கள் கூறிய வழிமுறைகள், வழிபாடு அல்லது பரிகாரத்தை இங்கு பார்ப்போம்.


வசிய மருந்து செய்வது எப்படி ? தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும் 


சித்தர்கள் வெறும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை மட்டும் கொடுத்துச் செல்லவில்லை. 

அவர்கள் குடும்ப உறவில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை தீர்க்கும் வகையில் பல வழிபாடு மற்றும், வழி முறைகளை கூறி சென்றுள்ளனர்.

 கணவன்- மனைவி இடையே வசியம் அதிகரிக்க வழியை கூறியுள்ளனர். இதற்கு இறைவனின் அருளும், திருமண வாழ்வில் நம்பிக்கை வேண்டும்.


உறவில் சந்தேகத்தைப் போக்க சித்தர்கள் காட்டிய வழி:

லவங்கம் ஒரு அற்புதமான வசிய பொருள். மகாலட்சுமிக்கு லவங்கம் வைத்து வழிபட வசியமாகி செல்வ நிலை உயரும் அற்புதம் நிகழும்.

சித்தர்கள் கூறக் கூடிய வசிய குறிப்புகளில் லவங்கம், ஜாதிக்காய், ஏலக்காய், மாசிக்காய் இல்லாமல் குறிப்பும் இருக்காது.

ஏனெனில் இவைகள் அனைத்தும் மிக சிறப்பான வசிய பொருட்கள். வசியம் என்பது ஒருவரை நல்ல ஒரு நேர்மறை செயலுக்காக அவரை ஈர்ப்பதற்காக செய்வதாகும். 

ஆனால் தற்போது வசியம் என்றால் ஒருவரை தன் பக்கம் மயக்குவது போல கெட்ட நிகழ்வு சித்தரிக்கப்படுவதால், வசியம் என்ற சொல் மோசமானதாக மாறியுள்ளது.

சந்தேகத்தைப் போக்க வசியம் செய்வது எப்படி?


ஒரு வெற்றிலை

2 லவங்கம்,

ஒரு ஜாதிக்காய்,

2 மாசிக்காய்,

சிறிய நீளத்துடன் கூடிய நெல்லிக் குச்சி, துளசிக் குச்சி சேர்த்து ஒரு பூணூலால் கட்டிவிடுங்கள்.

அதோடு மஞ்சள் குங்குமத்தை வெற்றிலையில் வைத்து நன்றாக மடித்துவிடுங்கள்.

இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு சிறிய பச்சை துணியில் வைத்து கட்டிவிடுங்கள்.


வசியம் செய்வது எப்படி இதுவரை வெளி வராத சக்தி வாய்ந்த ரகசிய முறை பற்றி அறிய தொடரவும்.....


இதை 21 நாட்கள் நாம் தூங்கும் போது தலையணைக்கு கீழ் வைத்து படுக்க வேண்டும். கணவனுக்கு ஒன்று, மனைவிக்கு ஒன்று என இதை தனித்தனியாக அவர்களின் தலையணைக்கு கீழ் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரார்த்தனை:


தூங்குவதற்கு முன் நீங்கள் பிரார்த்தனை செய்வது அவசியம்.

சிவன் பார்வதியை நினைத்து "தீர்க்க சுமங்கலி பவ" என சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

21 நாட்கள் நீங்கள் தொடர்ச்சியாக இரவில் அந்த பச்சை துணியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து தூங்க வேண்டும்.

இந்த 21 நாட்கள் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்வது அவசியம். காலையில் பூஜை செய்யும் போது அதை எடுத்து அதற்கு ஒரு ஊதுபத்தி அல்லது தூபம் காட்டி வழிபட வேண்டும்.

21 நாட்கள் இதை செய்து, 22ம் நாள் ஒரு கடல் அல்லது ஓடும் நீரில் கொண்டு சென்று அதைப் போட்டு விட்டு கை எடுத்து கும்பிட்டு இனி எல்லா தீய சக்திகளும் நீங்கி, நாங்கள் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்யவும். இதை இருவரும் சேர்ந்து செய்யலாம் அல்லது யாரேனும் ஒருவர் செய்யலாம்.

வயிற்றில் உள்ள மருந்தை முறியடிக்க எளிய முறை ! கிளிக் செய்யவும் 


மேலும் ஒரு கண்ணாடி டம்ளரில், ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக அறுத்து அதில் போட்டு, சிறிது கல் உப்பு போட்டு எப்போதும் படுக்கை அறையில் வைக்கவும். இதனால் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும், குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வராமல் தடுக்கும் சக்தி வீட்டில் நிறைந்திருக்கும். சந்தேகம் வராது.

குடும்பத்தில் சந்தேகம் வந்தால் மகிழ்ச்சியும், நிம்மதியும் போய்விடும். அதனால் மேற்சொன்ன வசிய பொருட்களை வைக்க குடும்பத்தில் பிரச்னை நீங்கி இன்பம் அதிகரிக்கும்.

இந்த வசிய முறையை மூன்று முறை தொடர்ச்சியாக செய்வது நல்லது. அதாவது 21,21,21 நாட்கள் ஒருமுறை புதிதாக அந்த வசிய பொருட்களை பச்சை துணியில் கட்டி வைத்து உறங்குவது நல்லது.

இதனால் கண்டிப்பாக குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்து குழந்தைகளுடன் தன தானியம் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள்.


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்