இன்னைக்கு நம்முடைய பதிவில் கணபதி உபாசனை எப்படி கடைபிடிப்பது
என்பதை பார்க்கலாம் மாந்திரீகத்தை பொறுத்தவரைக்கும் கணபதி
உபாசனை செய்து முடிக்காமல் கணபதியின் பூஜை சித்தியாகாமல்
கணபதியின் மந்திரம் உங்களுக்கு கைகூடாமல் உங்களால் எந்த ஒரு
விஷயத்தையும் சாதிக்க முடியாது.
அந்த அளவிற்கு கணபதியின் மந்திரம் பூஜை உபாசனை என்பது மிக மிக
முக்கியமானது அந்த வகையிலே இன்றைக்கு நாம் மிகவும் எளிமையான
முறையில் 12 நாளில் கணபதி உபாசனையை எப்படி செய்வது என்பதை
பார்க்கலாம் இங்கு நான் கீழே கொடுத்துள்ள யந்திரத்தை தங்கம் அல்லது
வெள்ளி இரண்டுமே முடியாதவர்கள் செம்பு தகட்டில் வரைந்து கொள்ளவும்.
வரைந்து கொண்டு அந்த தகட்டிற்கு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து
இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை வைத்து செம்பு தகட்டை சுத்தம் செய்யவும்
எலுமிச்சம் பழத்தால் தேய்த்து எடுக்கவும் அதன் பிறகு அந்த தகட்டிற்கு பால்
பன்னீர் சந்தனம் இளநீர் தேன் முதலியவற்றால் அபிஷேகம் செய்வது போல
செய்து அந்த எந்திரத்தை விபூதி கொண்டு ஈரம் இல்லாமல் துடைத்து
எடுக்கவும் இந்த எந்திரத்திற்கு சாப நிவர்த்தி மந்திரமும் பிராண பிரதிஷ்டை
மந்திரமும் சொல்லி யந்திரத்தின் மேல் விபூதி போடவும்.
அதன் பிறகு இந்த எந்திரத்திற்கு வாசனை திரவியங்கள் சாற்றவும் அதாவது
சந்தனம் அத்தர் புனுகு ஜவ்வாது முதலிய வாசனைப் பொருட்களை
இயந்திரத்தின் மேல் சாற்றவும் அதன் பிறகு எந்திரத்தை ஒரு தாம்பாள தட்டில்
வைத்து மலர்களால் அலங்காரம் செய்யவும் மல்லிகை அருகம்புல் முல்லை பூ
வெள்ளெருக்கம் பூ முதலில் வென்றால் அலங்காரம் செய்வது நல்லது
இவ்வாறாக அலங்காரம் செய்யப்பட்ட இந்த எந்திரத்தை ஒரு நாளைக்கு 108
உரு வீதம் குறைந்தது 12 நாள் மந்திரம் ஜெபித்து மல்லிகை பூவால் அர்ச்சனை
செய்ய மந்திரம் சித்தியாகும் இந்த எந்திரம் உயிர் பெறும் இதற்கு படையலாக
ஒரு தலை வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி கலசம் வைத்து அதன் மீது
மா விலை வைத்து அதன் மீது தேங்காய் வைத்து அந்த தேங்காய்க்கு மஞ்சள்
பூசி சந்தனத்தால் பொட்டு வைத்து வாசனை திரவியங்கள் பன்னீர் தெளித்து
விடவும்.
அதற்குப் பிறகு படையலாக தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல்
பொரிகடலை வெல்லம் சர்க்கரை பொங்கல் பால் பழ வகைகள் இனிப்பு
வகைகள் முதலியன வைத்து நெய் தீபம் ஏற்றி கற்பூரம் தூப தீப
ஆராதனையோடு ஊதுபத்தி ஏற்றி வைத்து தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து
மல்லிகை பூவால் மூல மந்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 108 ஒரு வீதம் 12
நாள் ஜபிக்க மந்திரம் சித்தியாகும்.
அதன் பிறகு இந்த மந்திரத்தை யாருக்கேனும் உபயோகப்படுத்த வேண்டும்
என்றால் தாம்பாள தட்டில் விபூதி பரப்பி இந்த எந்திரத்தை அதில் எழுதி
மந்திரத்தை 108 உரு ஜெபித்து அந்த விபூதியை கொடுக்க என்ன
காரியத்திற்காக கொடுப்பீர்களோ அந்த காரியம் ஜெயமாகும் எலுமிச்சம்
பழத்திலும் மந்திரித்து கொடுக்கலாம்.
100% சிறப்பான பலனை தரும் எடுத்த காரியம் கைகூடும் இந்த பூஜை செய்து
சித்தி செய்து கொண்டால் இதன் பிறகு உங்களுக்கு மாந்திரீகத்தில் நீங்கள்
என்ன காரியம் செய்தாலும் அது தடையின்றி கைகூடும். சிறப்பான பலனை
தரும்.
மூல மந்திரம் :
ஓம் நமோ தஷாக்ஷர மந்திராய மூஷிக வாகனாய ஐயும்
கிலியும் சௌவ்வும் ஆ ஊ மஹா கணபதி எனக்கு வசமாக ஸ்வாகா
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்