அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்முடைய மகாசக்தி சித்தர் பீடம் 

பதிவில் இன்னும் பார்க்க இருக்கிறீர்கள் அப்படின்னா நினைத்தது நிறைவேற 

ஸ்ரீ மகா கணபதி உடைய மந்திரம் மகா கணபதி உடைய மந்திரம் நிறையா 

இருக்கு அதுல ஒரு வகையான மந்திரம் தான் இது இந்த மந்திரத்தை நீங்க 

பத்தாயிரத்தி எட்டு முறை ஜெபித்து சித்தி செய்ய வேண்டும் 10008
 
தடவை சொன்னா மட்டும்தான் இந்த மந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்  

தடவ நீங்க சொல்லி முடிச்சதுக்கு அப்புறமா நீங்க எந்த ஒரு காரியத்தை 

நினைத்து இந்த மந்திரத்தை ஜெபிச்சாலும் அந்த காரியம் உங்களுக்கு மூணு 

நாளில் நடக்க ஆரம்பிக்கும் மந்திரம் என்ன அப்படிங்கறதை பார்க்கலாம் 







அரிவோம் சக்தி கணபதி வா வா சமய கணபதி வா வா சர்வ லோக 

தேவர்களும் சகல மனுஷர்களும் சகல ஜீவஜந்துக்களும் உன் முகம் என் 

முகமாகி யாவரும் என் வசமாகி அம்பிகையும் ஐங்கரனும் முன்னடக்க 

சுவாகா 




இந்த மந்திரத்தை நீங்க வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்னிக்கி 

ஆரம்பிக்கலாம் அல்லது ஒரு பௌர்ணமி நிறைந்த ஒரு பௌர்ணமியில் 

ஆரம்பிச்சு 10 ஆயிரத்து எட்டு தடவை நீங்க சொல்லி முடிக்கிற மாதிரி 

இருக்கும் நீங்க நார்மலா வந்து ஒரு அவல் பொரிகடலை தேங்காய் 

பழம்  வெத்தலை பாக்கு இது மட்டும் வச்சாலே போதுமானது





 ஒரு விநாயகர் உருவ சிலை அல்லது வினாயாகருடைய   ஒரு சிறிய 

படத்தோட முன்பாக ஒரு வாழை இலை விரிச்சு நீங்க வைக்கலாம் ஒரு சின்ன 

மஞ்சள் பிள்ளையார் பிடிச்சு அதற்கு முன்னாடி இந்த வாழை  இலையில 

 தேங்காய் பழம்  வெத்தலை பாக்கு அவல் பொரிகடல ஊதுபத்தி கற்பூரம் 

தூபதீபம் இது நம்ம நார்மலா நீங்க பண்ணிட்டு மந்திரம் சொல்லணும்  

விநாயகருக்கு வந்து அருகம்புல் சாத்திட்டு நீங்க இந்த மந்திரத்தை சொல்ற 

மாதிரி இருக்கும் இந்த மந்திரத்தை எப்படி சொல்லணும் அப்படின்னா கீழ 

வந்து ஒரு தர்ப்ப பாய் அல்லது ஒரு சிகப்பு நிற துணி நீங்க ஆசனமா  

 பயன்படுத்தனும் இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு 1008முறை 

சொல்லி நீங்க ஒரு பத்து நாள் ஜெபிசா போதுமானது இல்லை என்றாலும் ஒரு 

நாளைக்கு 108 முறை தான் சொல்ல முடியும் அப்படின்னாலும் பரவால்ல ஆனா 

கண்டிப்பா பத்தாயிரம் மந்திரத்தை நீங்க சொல்லி சித்தி பண்ணனும்






 ஒரு காரியம் உங்களுக்கு என்ன காரியம் நடக்கணும்னு நினைக்கிறீர்களோ 

ஒரு வேலை விஷயமாக ஒரு இன்டர்வியூ போறீங்க எத்தனை காலம்  ஆனாலும் 

உங்களுக்கு வேலை கிடைக்கல ஏதாவது ஒரு காரணத்தினால் தள்ளி போகுது 

இல்ல பெண் பாக்க போறீங்க கல்யாண விஷயமா போறீங்க எந்த காரியமா 

இருந்தாலும் சரி உள்ள ஒரு ரியல் எஸ்டேட் விஷயமா போறீங்க வீடு வாகனம் 

சம்பந்தமாக எதுவும் போறீங்க இல்ல பேங்க் லோன் போறீங்க இந்த மாதிரி 

என்ன காரியத்துக்கு போற மாதிரி இருந்தாலும் இந்த மந்திரத்தை 108 முறை 

சொல்லிட்டு போங்க சொல்லிட்டு போகணும் மூணு நாள் சொல்லி முடிச்சிட்டு 

நீங்க போனீங்க அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு அந்த வேலை 

கண்டிப்பாக நிச்சயமாக நடக்கும் அதில் எந்த  விதமான சந்தேகமும் 

கிடையாது. ஆனால் முறைப்படி இந்த மந்திரத்தை பத்தாயிரத்தி எட்டு தடவ 

நீங்க சொல்லி சித்தி பண்ணனும். அப்பதான் இந்த மந்திரம் வேலை செய்யும்  

நன்றி வணக்கம்




MAHA GURU BALAJI

CELL : +91 8838511337