நல்ல வேலை கிடைக்க பரிகாரம் - அரசு வேலை கிடைக்க
இந்த பிரச்சனை தீருவதற்கு வழிபாடுகள், ஆன்மிக பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே பல மாற்றங்களை சந்திக்க முடியும். வேலையில்லாதவர்கள், அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் ? தெரிந்து கொள்ள continue....
வேலை என்பது ஒவ்வொருவரின் அடையாளமாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. தனக்கென ஒரு வேலை இருப்பது பொருளாதார ரீதியான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் உதவிகரமாக இருக்கும்.
இதனால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் வேலை வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அரசு வேலை கிடைப்பதும், நினைத்தது போல் வேலை கிடைப்பது மிக சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது
பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைப்பது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது.
நீண்ட நாட்களாக வேலை தேடி அலைபவர்கள், வேலையில் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி வேலை மாறிக் கொண்டே இருப்பவர்கள், வேலையில் பல விதமான பிரச்சனைகளை சந்தித்து கொண்டே இருப்பவர்கள், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும்.
வேலை கிடைக்க வேண்டும் என்றால் நாம் வணங்க வேண்டிய தெய்வம் அனுமனும், முருகப் பெருமானும் தான். இந்த இரு தெய்வங்களையும் விடாபிடியாக, உண்மையான பக்தியுடன் தொடர்ந்து வழிபட்டு வந்தால் விரைவில் அரசு வேலையும், மனதிற்கு விருப்பமான வேலையும் அமையும்.
அஷ்ட கர்ம மூலிகைகள் பற்றி தெரியுமா ? continue reading......
இதற்கு அருகில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று தொடர்ந்து 27 நாட்களுக்கு கோவிலை வலம் வந்து வழிபட வேண்டும். பிரார்த்தனையில் இறுதி நாளான 27வது நாளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட வேண்டும்.
பிறகு ஒரு வெற்றிலையில் சிறிது வெண்ணெய் தடவி, அதன் மீது துளசி இலைகள் சிலவற்றை வைத்து, ஒரு சிறிய காகிதத்தில் பெயர், நட்சத்திரம், நம்முடைய வேலை தொடர்பான கோரிக்கையை எழுத வேண்டும்.
பிறகு அந்த வெற்றிலையை சுற்றி, மஞ்சள் நூலால் கட்டி, ஆஞ்சநேயரின் திருவடியில் வைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும். பிறகு அந்த வெற்றிலையை எடுத்துக் கொண்டு போய் வைத்து, வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு வாரம் வைத்து வழிபட்ட பிறகு, வெற்றிலை காய்ந்த பிறகு நீர்நிலைகளிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விட வேண்டும்.
இந்த 27 நாள் பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமானாலும் துவங்கலாம். அனுமனுக்கு உகந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்குவது சிறப்பு. மற்றொரு பரிகாரமாக முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். தொடர்ந்து 5 அல்லது 7 கிழமைகள் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது போல் வேலை கிடைக்கும்.
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்