என்ன அபிஷேகம் செய்தால் என்ன நன்மை
தெய்வ அபிஷேக பலன்கள்
என்ன அபிஷேகம் செய்தால் என்ன நன்மை - ஆன்மீகத் தகவல் - மாந்திரீகம்
கீழக்கண்ட தினங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யவும்
விநாயகர் ஞாயிற்றுக்கிழமை
சிவபெருமான் திங்கட்கிழமை
முருகர் செவ்வாயக்கிழமை
தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை
அம்மன் தெய்வங்கள் வெள்ளிக்கிழமை
ஶ்ரீமந் நாராயணன் மற்றும் அவரது அவதாரங்கள் சனிக்கிழமை
நவகிரகங்கள் ஞாயிற்றுக்கிழமை
என்ன அபிஷேகம் செய்தால் என்ன நன்மை
அபிஷேகப்பொருட்கள்
1.நல்ல எண்ணெய் அபிஷேகம்
நல்வாழ்க்கை அமையும் / வாழ்வில் ஒளி உண்டாகும்.
2.திருமஞ்சனம் அபிஷேகம்
அவப்பெயரை நீக்கி புத்துணர்வு பெற வைக்கும்
3.மஞ்சள்பொடி அபிஷேகம்
வசீகரம் உண்டாகும். அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள்
4.அரிசிமாவு அபிஷேகம்
கடன் தொல்லை, தீராக்கடன் தீரும் பணம் புரளும்
5 .பால் அபிஷேகம்
நோய் நீர்த்து குடும்பத்தில் மகிழ்வையும் நீண்ட ஆயுளையும் உண்டாக்கும்
6.நாட்டு சர்க்கரை அபிஷேகம்
எதிர்ப்புகள் மறையும்
7.பஞ்சாமிர்த அபிஷேகம்
உடல் நலம் பெறும், தீர்க்க ஆயுள் கிடைக்கும்,செல்வம் பெருகும்
8.பழங்கள் அபிஷேகம்
விளைச்சல் பெருகும்
9.தேன் அபிஷேகம்
இனிய குரல் வளம் கிடைக்கும். நாவன்மை உண்டாகும்.
10.நெய் அபிஷேகம்
மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி கிடைக்கும்
11.இளநீர் அபிஷேகம்
இன்பங்கள் நல்கும். மனஅமைதி, புத்தி தெளிவுபெறும். குடும்ப ஒற்றுமை குதூகலத்திற்கு வழி பிறக்கும்.
12.பசுந்தயிர் அபிஷேகம்
குழந்தை பாக்கியம் உண்டாகும்
13.எலுமிச்சை சாறு அபிஷேகம்
மனபயம் நீக்கும்
14.நெல்லிப்பொடி அபிஷேகம்
ஆயுள் விருத்தி ஏற்படும்
15.நெருஞ்சிப்பொடி அபிஷேகம்
தீராத வியாதிகளைத் தீர்க்கும்
16.வில்வ பொடி அபிஷேகம்
வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்களுக்கு கர்ப்பபை நீங்கும்
17.சொர்ணாபிஷேகம்
நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்
18.சந்தன அபிஷேகம்
எட்டுவித செல்வங்களும் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்
19.விபூதி அபிஷேகம்
20.பன்னீர் அபிஷேகம்
மரியாதை ஏற்படும்
21.பஞ்சகவ்ய அபிஷேகம்
பாவங்கள் அகலும்
22.மலர்கள் அபிஷேகம்
இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில்
மகிழ்ச்சி பொங்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும்
23.தைல அபிஷேகம்
சுகம் கிடைக்கும்
24.புனித தீர்த்தங்கள் அபிஷேகம்
காரியசித்தி உண்டாகும். மனம் சாந்தி அடையும்.
25.மாதுளை அபிஷேகம்
கோபத்தைப் போக்கும்
26.நார்த்தை அபிஷேகம்
நேர்மையை அளிக்கும்
27.மாம்பழ அபிஷேகம்
மகனுக்கு சீர் சேர்க்கும்
28.கரும்புச்சாறு அபிஷேகம்
பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்
29.அன்னம் பாலித்தல்
நாடாளும் வாய்ப்புக் கிடைக்கும்
30.வஸ்திரம் அணிவித்தல்
கௌரவம் காக்கப்படும்.
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337


0 கருத்துகள்