மாந்திரீகம் | ஆன்மீக தகவல்கள் | spirituality | black magic



மாந்திரீக தாந்திரீகத்தை போக்கும் எலுமிச்சம்பழம்.










மாந்திரீகம் | ஆன்மீக தகவல்கள் | spirituality | black magic 




நம்முடைய நேரம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு நன்மைகள் நடைபெறாமல் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதில் பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வந்து கொண்டே இருக்கும். 


மருத்துவரிடம் சென்று கேட்டால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட பிரச்சினையில் இருப்பவர்களுக்கு எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளின் பாதிப்பும் இருக்கிறது என்று பொருள்படும். அப்படிப்பட்ட தீய சக்திகளையும் எதிர்மறை ஆற்றல்களையும் நீக்குவதற்கு உதவக்கூடிய எலுமிச்சம் பழ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேவ கனி என்று கூறக்கூடிய பழமாக திகழ்வதுதான் எலுமிச்சம் பழம். எலுமிச்சம் பழத்தில் பல மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்வதுண்டு. தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பழமாகவும் இந்த எலுமிச்சம் பழம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக உக்கிர தெய்வங்களுக்கு ம் அம்பிகைக்கும் உகந்த பழமாக எலுமிச்சம் பழம் திகழ்கிறது. 


எலுமிச்சம் பழத்தை நறுக்கி பரிகாரம் செய்வதால் பலியிடுவதற்கு சமமான பலன் கிடைக்கும் என்று கூற்றும் நிலவி வருகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் நீக்கும் வழிபாட்டை தான் பார்க்க போகிறோம்.

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை அல்லது அமாவாசை தினங்களில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு ஆறு எலுமிச்சம் பழம் வேண்டும். ஆறு நல்ல எலுமிச்சம்பழமாக பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். 


இந்த எலுமிச்சம் பழங்கள் முற்றிலும் கனியாக இருக்க வேண்டும். அதாவது முழு மஞ்சளாக இருக்க வேண்டும். இதை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அம்மனின் ஆலயத்தில் அம்மனுக்கு முன்பாக திரிசூலம் கண்டிப்பான முறையில் இருக்கும்.

இந்த திரிசூலத்தில் பலரும் எலுமிச்சம் பழத்தை குத்தி வைத்திருப்பார்கள். அதேபோல் முதலில் மூன்று எலுமிச்சம் பழத்தை எடுத்து நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திரிசூலத்தில் குத்த வேண்டும். 




பிறகு குத்திய இந்த மூன்று எலுமிச்சம் பழங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு மீதமிருக்கும் மூன்று எலுமிச்சம் பழங்களை திரிசூலத்தில் குத்த வேண்டும். பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் இந்த மூன்று எலுமிச்சம் பழங்களையும் கையில் வைத்துக் கொண்டு அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு வீட்டிற்கு இந்த எலுமிச்சம் பழங்களை எடுத்து வந்து பிழிந்து நன்றாக தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெறித்து விட வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த எலுமிச்சம்பழ தீர்த்தத்தை அருந்தலாம். இப்படி அருந்துவதன் மூலம் அவர்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகும் என்று கூறப்படுகிறது. 


இதில் ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் இரண்டாக நறுக்கி அதில் குங்குமத்தை தடவி நிலை வாசலில் இரண்டு புறங்களிலும் வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் அணுகாது என்று கூறப்படுகிறது. இதை தொடர்ச்சியாக செய்வதோடு அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலையை நம்முடைய கைகளாலேயே கோர்த்து சூட்டுவதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் எளிமையான இந்த எலுமிச்சம் பழ வழிபாட்டை முழு மனதுடன் அம்மனை நினைத்து செய்பவர்களுக்கு அவர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறேன்.



நவகிரக வசிய பூஜை செய்ய விரும்பும்  நபர்கள் BUY NOW பட்டன் ஐ  கிளிக் செய்து முன்பதிவு செய்து  கொள்ளவும்  



special coupon code :  GREAT2000


INSTANT DISCOUNT FOR RS.2000/-



https://www.manthrigam.in/product/33031704/Navagraha-vasiyam-pooja


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337




கருத்துரையிடுக

0 கருத்துகள்