கருவூரார் அருளிய மிருகவசியம்:
வன விலங்குகளிடம் இருந்து நமக்கு தீங்கு ஏதும் நிகழாமல் காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கப்பட்ட ஒரு உபாயமே மிருக வசியம். இயற்கையோடு இணைந்து வனாந்திரங்களில் வாழும் போது, சக உயிரினங்களோடு இணக்கமாய் இருந்திட இந்த கலை பயன்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி இந்த மிருக வசியங்களுக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதும் கூட மலைவாழ் மக்கள் இது போன்ற சில உபாயங்களை பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.
சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே மிருகவசியம் பற்றி ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அநேகமாய் பெரும்பாலான சித்தர்கள் இது தொடர்பில் ஏதேனும் ஒரு தகவலை தங்கள் பாடல்களில் கூறியிருக்கின்றனர். அத்தகைய சில மிருக வசிய உபாயங்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.
வசிய தேவி பூஜை ரகசியம் | கடன் தொல்லை நீங்க | மாந்திரீகம் ...
இன்று நாம் பார்க்க இருப்பது கருவூரார் அருளிய மிருக வசியம். இந்த தகவல் "கருவூரார் வாதகாவியம்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு...
பாரப்பா வெண்குன்றி மூலம் வாங்க பாங்கான அமாவாசை நாள் தன்னில் நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசிவசி நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி பேரப்பா பிடுங்கியதை வாயில் இட்டு பேசவே மிருக வசீகரங் காணும்.
-கருவூரார்.
நிறைந்த அமாவாசை நாளில் வெண்குன்றி மூலிகைச் செடியினை கண்டறிந்து, "வம்வம் வசிவசி மிருக வசீகரி ஓம்" என்ற மந்திரத்தினைச் செபித்து அந்த செடியின் மூலத்தை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். (மூலம் என்பது பச்சையாக பிடுங்கப் பட்ட வேர் ஆகும்.)
வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபட வேண்டும்....
பின்னர் வன விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில், இந்த வேரினை வாயில் அதக்கி வைத்துக் கொண்டு மிருகங்களுடன் பேச அவை வசியமாகுமாம் என்கிறார் கருவூரார். இப்படி செய்வதன் மூலம் எந்த வகையான வன விலங்குகளிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாமாம்.


0 கருத்துகள்