வறுமையில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராக மாற
வறுமையில் பிறந்த நிறைய பேர் தங்களுடைய உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் பெரிய கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில பேரால் மட்டும் வறுமையில் இருந்து மீண்டு வந்து தேவைக்கு ஏற்ப கூட சம்பாதிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். நீங்கள் எப்படிப்பட்ட பணக்கஷ்டத்தில் இருந்தாலும் சரி.
பின் சொல்லக்கூடிய இந்த எளிமையான பரிகாரங்களை செய்து வந்தால் உங்களுடைய விடாமுயற்சியுடன் சேர்ந்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேலை செய்யும். சீக்கிரமாக நீங்கள் கோடீஸ்வரராகும் யோகத்தை பெற்று தரும் எளிய ஆன்மீகம் சொல்லும் பரிகாரங்களில் ஒரு சிலவற்றை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வறுமை நீங்க அசோக மர பரிகாரம்
அசோக மரம். இது இறை சக்தி நிரம்பிய மரமாக சொல்லப்பட்டுள்ளது. இதின் வேர் காய் விதை பூ என்று பலவிதமான பொருட்கள் நமக்கு கிடைக்கும். இதை வைத்துதான் இன்று ஒரு சில பரிகாரங்களை நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சரி இந்த அசோக மரம் எங்கு வளர்ந்திருக்கும். நிறைய கோவில்களுக்கு அருகில் இந்த மரத்தை வளர்ப்பார்கள், அல்லது காடான பகுதிகளில் இந்த மரம் வளர்ந்து இருக்கும்.
அந்த இடத்திலிருந்து தான் நீங்கள் பின் சொல்லக்கூடிய இந்த பொருட்களை சேகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் உங்களுடைய வரவேற்பறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் 2 அசோக மரத்து பூவை போட்டு, அதில் தேனை ஊற்றி வைத்தால் உங்களுடைய வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகும் பண வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரே ஒரு அசோக மர விதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளி தாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளி தாயத்துக்குள் கொஞ்சமாக பச்சை கற்பூரம் போட்டு, இந்த அசோக மர விதையை அதில் போட்டு மூடி உங்களுடைய கழுத்திலோ கையிலோ கட்டிக் கொண்டால் உங்களுடைய வருமானம் இரட்டிப்பாக பெருகும். நீங்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் அதில் அமோக லாபத்தை பெறலாம். இந்த தாயத்தை ஒரு வெள்ளிக்கிழமை அன்று தயார் செய்து கட்டிக் கொள்ளலாம்.
தினமும் வெளியில் செல்லும்போது ஒரு அசோக மர இலையை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால், செல்லும் காரியம் வெற்றி அடையும். தினம் தினம் நீங்கள் செய்யக்கூடிய வேலை சிறப்பாக அமையும். அந்த வேலையின் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அசோக மரத்தின் வேரை எடுத்து அதற்கு மேலே கொஞ்சம் மஞ்சள் பூசி பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பல தடை விலகும்.
உங்களுடைய வீட்டு பக்கத்தில் அல்லது கோயில்களுக்கு அருகாமையிலோ இந்த அசோக மரத்தை பார்த்தால், அதில் உள்ள பொருட்களை மேலே சொன்ன பயன்பாட்டிற்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மறக்காமல் தினமும் அந்த அசோக மரத்திற்கு உங்கள் கையால் தண்ணீரை விடுங்கள். உங்களுடைய வம்சமே செல்வ செழிப்பாக மாறும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
0 கருத்துகள்