Ninaithathu nadakka manthiram - Kerala manthrigam - Vasiyam

வீட்டில் பெண்களின் கையால் செய்ய வேண்டிய 3 வேலைகள்.










ஒரு வீட்டில் கட்டாயம் பெண்கள் செய்ய வேண்டிய மூன்று வேலைகளைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்று திணிக்கவில்லை. பெண்கள் கையால் இந்த வேலை செய்தால், அது அந்த வீட்டிற்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். 

பெரிய பெரிய பணக்காரர்கள் வீட்டில் எல்லாம் பெண்கள் இந்த வேலையை செய்கிறார்களா, அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ற கேள்வியை எல்லாம் எழுப்ப வேண்டாம். பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் இல்லை. நாமும் பணக்காரராக வேண்டும், நம்முடைய குடும்பத்திலும் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்று நினைக்கும், கஷ்டப்படுபவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள எளிமையான பரிகாரம்.

முதல் வேலை காலையில் எழுந்தவுடன் நிலை வாசலில் ஒரு சொம்பு தண்ணீரை, வீட்டு பெண்கள் கையால் தான் தெளிக்க வேண்டும். கோலம் கூட வேறு ஒருவர் கையால் போடலாம். ஆனால் நிலை வாசலில் தெளிக்க கூடிய அந்த முதல் தண்ணீர் வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் தெளிக்கும் போது, அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலையாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும், எத்தனை வேலைக்காரர்கள் சமைத்தாலும், கணவருக்கு பரிமாறக்கூடிய கை மனைவியின் கையாக இருக்க வேண்டும். நிறைய பேர் வீடுகளில் கணவரே சாதத்தை எடுத்து தட்டில் போட்டு சாப்பிட்டு கொள்வார். அதை தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் மனைவியின் கையால் கணவருக்கு சாப்பாடு பரிமாறினால் அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு ஒரு நாளும் குறைபாடு வரவே வராது.

அடுத்து மோர் கடைவது. மத்து போட்டு மோர் கடைய கூடிய வேலையை பெண்கள்தான் செய்ய வேண்டும். சில பேர் மோரில் வெண்ணை கூட கடைந்து எடுப்பார்கள். இப்படி மத்தை வைத்து சமையலறையில் கடையக்கூடிய வேலையை குடும்பத்தலைவி செய்வது அந்த வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கடையக்கூடிய சத்தம் மகாலட்சுமிக்கு மிக மிகப் பிடிக்குமாம். 

பாற்கடலை கடைந்த போது தான் மகாலட்சுமி வந்தார்கள் அல்லவா. மேல் சொன்ன இந்த மூன்று விஷயங்களும் எவர் ஒருவர் வீட்டில், பெண்களது கையால் செய்யப்படுகிறதோ அந்த வீட்டில் நிச்சயம் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. இதை பெண்கள் தான் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை திணிக்கவில்லை.  

பெண்கள் செய்தால் நல்லது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த விஷயங்களை ஒரு சில மாதங்கள் பின்பற்றி பாருங்கள். வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு பிடித்தது போல நடக்கும் பட்சத்தில் இதை அப்படியே பின்பற்றலாம். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்