Ninaithathu nadakka pariharam - Kerala manthrigam - அரசமர வழிபாடு

 அரச இலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்...?






நம்முடைய கஷ்டங்கள் சீக்கிரமாகவே, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினாலே போதும். 


இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக இருக்கலாம். அரச மரத்திற்கும், அரசமரத்தடி பிள்ளையாருக்கும், அபரிமிதமான சக்தி இருக்கின்றது.


அரச மர இலையில், மண் அகல் வைத்து, தீபம் ஏற்றும் பட்சத்தில் நாம் செய்த பூர்வ ஜென்ம பாவம், நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷம், நவக்கிரக தோஷம், சர்ப்ப தோஷம், அனைத்தும் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.


அரசமரத்தின் வேர் பகுதியில், பிரம்மாவும், நடுப்பகுதியில் திருமாலும், மேல்பகுதியில் ஈசனும் வாசம் செய்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனாலேயே இந்த மரத்திற்கு 'ராஜ விருட்சம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாக அரச மரத்தை வலம் வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


அரசமர காற்றை சுவாசிக்கும் போது, கருப்பை பிரச்சனைகள் குணமாகும்.


 திங்கட் கிழமையில் பிறந்தவர்கள் 3 அரச இலைகளை வைத்து, அதன்மேல் 3 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.


செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்கள் 2 அரச இலைகளை வைத்து, 2 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.


புதன்கிழமை பிறந்தவர்கள் 3 அரச இலைகளை வைத்து, 3 மண் அகல் தீபங்கள் ஏற்றவேண்டும். 


வியாழக் கிழமை பிறந்தவர்கள் 5 அரச இலைகளை வைத்து, 5 மண் அகல் தீபம் ஏற்ற வேண்டும். 


வெள்ளிக் கிழமை பிறந்தவர்கள் 6 அரச இலைகளை வைத்து, 6 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.


சனிக் கிழமை பிறந்தவர்கள் 9 அரச இலைகளை வைத்து, 9 மண் அகல் தீபங்கள் ஏற்றவேண்டும். 


ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்கள் 12 அரச இலைகளை வைத்து, 12 மண் அகல் தீபமேற்ற வேண்டும்.


நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இப்படி ஒருமுறை தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் உண்டு.


இல்லை என்றால், அரசமரத்தடி பிள்ளையாருக்கு முன்பாக, இப்படி தீபம் ஏற்றி, விநாயகரை பாலபிஷேகம் செய்து வழிபட்டாலும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்கள் கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்