selvam sera pariharam - kerala manthrigam - செல்வம் சேர வழிபாடு - selvam sera valigal

வீட்டில் இந்த பரிகாரம் செய்தால் பணம் மட்டுமல்ல..புகழும் செல்வாக்கும் உங்களை தேடி வரும்!




பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம் செய்ய வேண்டும். அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பதுடன் அதை சேமிக்கவும் முடியும் புகழோடு வாழவும் முடியும்.


பணம் ஓரளவிற்கு இருந்தால் பணம் மனிதர்களுக்கு அடிமையாக இருக்கும். அதுவே பணம் அளவிற்கு மீறி இருந்தால் அந்த பணத்திற்கு மனிதர்கள் அடிமையாகி விடுவார்கள். பணம் எந்த அளவிற்கு இருந்தாலும் ஆணவம், அகங்காரம் கொள்ளாமல் சாதாரணமாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அதுவே பணத்தை தக்க வைப்பதற்கான எளிய வழி.


பணம் அதிகம் சேர


செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும். செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும். கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.


அன்னதானம்


சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும். பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும். பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.


மகிழ்ச்சியாக இருங்கள்


பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் ஒரு வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே அந்த வீட்டில் செல்வம் எளிதில் சேரும். யார் ஒருவர் தனது மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்களோ அவர்களைத் தேடி செல்வம் வரத்தொடங்கும். இது பலரது வாழ்க்கையில் நிரூபிடிக்கப்பட்ட உண்மை. வந்த செல்வத்தை மதிக்க வேண்டும். வராத செல்வத்தை நினைத்து ஏங்கக் கூடாது. எனவே மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமி வீடு தேடி வருவாள்.


பணம் அதிகம் பெருக


ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது


ஊறுகாய் அவசியம்


எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் வறுமை இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும். மளிகை சாமான்கள் வாங்கும் போதே ஊறுகாய்களையும் லிஸ்ட் போட்டு வாங்கி விடுங்கள்.


மஞ்சள் கிழங்கு


நம்முடைய வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் அவசியம் வழங்க வேண்டும்.


அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.



சுமங்கலி தெய்வங்கள்


வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்