குலதெய்வ சாபம்.. கோபம் தீர இதை செய்ய மறக்காதீங்க.. நல்லது சீக்கிரம் நடக்கும்
குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :
குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.அதன் விபரம் கீழே கொடுக்கபட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்..
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு, அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு இங்க் பில்லர் மூலமாக வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .
பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக்கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்..
கோவில் பூட்டியிருந்தாலும் பரவாயில்லை.. தவறில்லை..
நீங்கள் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நீங்கள் ஏற்றிய அந்த தீபம் அம்மனிடம் பேசும் ..
தொடர்ந்து 15 நாட்கள் இதை செய்ய வேண்டும் இடையில் தடை ஏற்ப்பட்டால் அதை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்..
இதை செய்துகொண்டிருக்கும்போதே பல மாற்றங்களை உணரப்பெறலாம்..
0 கருத்துகள்