kubera girivalam must know about its significance rules and benefits - kerala manthrigam

கோடீஸ்வர யோகம் தரும் குபேர கிரிவலம் பற்றி தெரியுமா ?




அதென்ன குபேர கிரிவலம்?


🌺உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் 

கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது உண்மை உண்மை உண்மை



🌺நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம்.

சரி.பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும், அடிக்கடியாவது உணர்கிறோம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம்.



🌺🌿ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் வாழும்.


🌺ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.


🌺இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்; மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்.இரவு 7மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.


🌺அதில் அதிகமாக "ஓம் ரீம் தன தான்யம் அனுகிரஹ ஆகர்ஷய ஆகர்ஷய" என்று கூறுவது மிகவும் சிறப்பு. அனால் தனம் வந்த பின்பு அந்த தனத்தால் மற்றவருக்கு துன்பம் விதித்தால் வந்த செல்வம் எப்படி போகும் என்று எம்பிரானுக்கு மட்டும் தான் தெரியும்.


🌺கிரிவலம் செல்லும் போதே, அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம். அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்.


🌺ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை.


🌺கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது. ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை) அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.


🌺ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள். நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!


🌺நமது வீண் பேச்சு அவர்களுக்கு மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்ககூடாது. அதிலே உங்களால் முடிந்தால் அங்கு கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் , வஸ்திர தானம் செய்வது கோடி புண்ணியம்.


🌺குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்