கனவில் எருமை மாடு வந்தால் கெட்டது நடக்குமா?
எருமை மாடு எமன் வாகனம் என்பதால் அது கனவில் வந்தால் அது கெட்ட பலன்களை அளிக்கும். ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எருமை மாட்டை கனவில் கண்டால் நல்ல பலன்களும் உண்டு கெட்ட பலன்களும் உண்டு அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
எருமை மாடு நிற்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
எருமை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால்:
எருமை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால் பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று அர்த்தம்.
எருமையுடன் சண்டை போடுவது, அதனை துப்புறுத்துவது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையிலிருந்து விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம்.
எமதர்மன் உங்களை நோக்கி வருவது போல் கனவு கண்டால் உங்களுடைய ஆயுளை குறிக்கும்.
எருமை கூட்டம் கனவில் வந்தால்:
எருமை கூட்டமாக இருப்பது போல் கனவு கண்டால் பெரியவர்கள் மத்தியிலும் பணிபுரியும் இடங்களிலும் மரியாதை கூடும். சமுதாயத்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் நட்பு கிடைக்கும்.
எருமை பால் மற்றும் அதன் சம்பந்தமான கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நோய்நொடிகள் நீங்கி நல்ல நிலைக்கு வருவார்கள்.
எருமை உங்களை துரத்துவது போன்ற கனவு வந்தால், வீண் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
பொதுவாக எருமை உங்கள் கனவில் வந்தால் நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களின் பொறுமை குணம் கூடும். கடுமையான சூழலை சமாளிப்பீர்கள். பிரச்னைகள் கண்டு அஞ்சமாட்டீர்கள்.
எருமை முட்டுவது போல் கனவு கண்டால் கடன்காரர்களால் பிரச்சனை ஏற்படுவதைக் குறிக்கின்றது.
எருமை பூட்டிய வண்டியில் நீங்கள் போவது போல கனவு கண்டால் ஆயுளுக்கு கண்டம் ஏற்படும்.


0 கருத்துகள்