சூரிய திசை புதன் புத்தி :
சூரிய திசையில் புதன் புத்தியானது 10 மாதம் 6 நாள் நடைபெறும்.
புதன் பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும், சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தாலும், நல்ல தைரியம் துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வபக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி தொழில் வியாபாரத்தில் ஈடுபாடு உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். கணிதம், கம்பியூட்டர் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொடுக்கும். ஆடை ஆபரணம் சேரும். பெண் குழந்தை யோகம் கிட்டும். பொருளாதாரம் உயரும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
புதன் பகவான் லக்னத்திற்கு 6,8,12 ல் அமைந்தோ, பகை நீசம் பெற்றோ, பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் மனநிலை பாதிப்பு, நரம்பு சம்மந்த பட்ட நோய், எதையும் சிந்திக்க முடியாத நிலை, ஞாபக சக்தி குறையும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் கெட்ட பெயர் எடுக்கும் நிலை, தாய் வழி மாமனுக்கு பிரச்சனை ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும் வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
0 கருத்துகள்