சூரிய திசையில் குரு புத்தி :
சூரிய திசையில் குரு புத்தியானது 9 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
குரு பகவான் கேந்திர திரிகோணங்களில், ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டிலிருந்து சுபர் சேர்க்கை பெற்றருந்தாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பொருளாதார நிலையில் உயர்வு, சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு, பெயர் புகழ் உயரக் கூடிய யோகம், தெய்வீக சிந்தனை, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு போன்ற அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
குரு பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றோ, நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்றோ, திசாநாதனுக்கு 6,8,12 ல் அமையப் பெற்றோ, இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், தேவையற்ற அவமானங்கள், உற்றார் உறவினர்களிடம் பிரச்சனை, இடம் விட்டு இடம் சென்று அலையும் நிலை, அரசாங்கத்தால் பிரச்சனை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.
0 கருத்துகள்