சூரிய திசையில் சூரிய புத்தி :
சூரிய திசை சூரிய புத்தியின் காலங்களில் 3 மாதம் 18 நாட்களாகும்.
சூரிய திசையின் சுய புக்தி காலங்களில் ஜெனன ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் நட்பு, மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணை, மற்றும் பிள்ளைகளால் நேசிக்கப்படும் யோகம், மனநிம்மதி, ஆடை ஆபரண சேர்க்கை, தெய்வதரிசனங்களுக்காக பயணம் செய்யும் அமைப்பு, திருமணம், சிறப்பான புத்திரபாக்கியம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் தந்தையால் சாதகப்பலன்கள், மற்றும் கணக்கு, கம்பியூட்டர் கல்வியில் உயர்வு உண்டாகும் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
அதுவே சூரியன் பலமிழந்து அமைந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு, இருக்கும் இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, வீரம், அக்கினி பயம் பகைவர்களின் தொல்லை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும்.
0 கருத்துகள்