சூரிய திசையில் சுக்கிர புத்தி :
சூரிய திசையில் சுக்கிர புத்தி 1 வருட காலம் நடைபெறும்.
சுக்கிர பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர,திரிகோணத்திலோ, 2,11 ம் இடங்களிலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று சுபர் வீடுகளில் அமையப் பெற்றாலும் அரசாங்க வழியில் அனுகூலம் வண்டி வாகன சேர்க்கை ஆடை ஆபரண மற்றும் அசையா சொத்துக்களின் சேர்க்கை, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, பெண் குழந்தை யோகம், குடும்பத்தில் பூரிப்பு, ஒற்றுமை, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, நல்ல கட்டில் சுகம், சுகபோக, ஆடம்பரமான வாழ்க்கை அமையும் பெண்களால் முன்னேற்றம் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சுக்கிரன் பலமிழந்து லக்னத்திற்கு 6,8,12 ல் மறைந்து, பகை நீசம் பெற்று, பாவிகளின் சேர்க்கையுடனிருந்தால் சர்க்கரை வியாதி, மர்மஉறுப்புகளில் நோய்கள், கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, திருப்தியற்ற நிலை, திருமண சுபகாரியம் நடைபெற தடை, மனநிம்மதி குறைவு, வண்டி வாகனங்கள் பழுதுபடுதல், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாது சுகபோக சொகுசு வாழ்விற்கு தடை உண்டாகும்.


0 கருத்துகள்