சூரிய திசையில் கேது புத்தி :
சூரிய திசையில் கேது புத்தியானது 4 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.
கேது பகவான் 3,6,11 ம் இடத்திலும், லக்னாதிபதி சேர்க்கையும் பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சேர்க்கை பார்வை சாரம் பெற்று கேந்திர திரிகோணத்திலிருந்தாலும் தெய்வ பக்தி மிகுதியாகும் கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் புண்ணிய ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பும், புகழ் பெருமையும் உயரும். பகைவர்களை வெல்லும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கைவிட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புராண கதைகளை வாசிக்கும் யோகம் கிட்டும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
கேது 2,8 ல் இருந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் பணவிரயம், தந்தைக்கு கண்டம், தலையில் நோய், சீறுநீரக பிரச்சனை, மனைவி பிள்ளைகளுக்கு சோதனை, அரசாங்கத்தால் அவமானங்கள், தேவையற்ற குழப்பம் மற்றும் மனநிலை பாதிப்பு, விஷத்தால் கண்டம் வயிற்று வலி பிரச்சனை, வண்டி வாகனத்தால் வீண் செலவு எதிர்பாராத விபத்து போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
0 கருத்துகள்