சூரிய திசையில் சனி புத்தி :
சூரிய திசையில் சனி புத்தியானது 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
சனி பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலும் 3,6,10,11 ல் இருந்தாலும் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஆட்சி உச்சம், பெற்றிருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் வேலையாட்களால் அணுகூலம், விவசாயத்தால் அதிக லாபம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் அனுகூலம், ஆடை ஆபரணம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வு, எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். அசையா சொத்துகளால் அணுகூலம் ஏற்படும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சனி பலமிழந்து பகை நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கையுடன் இருந்தால் உடல் நலபாதிப்புகள் மனதில் சஞ்சலம், நீசர்களுடன் சகவாசம், அரசு வழியில் பிரச்சனை, நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பகை இடம் விட்டு இடம் பெயருதல், பங்காளிகளுடன் வம்பு வழக்கு கலகம் உண்டாகும். வாதம், எலும்பு சம்பந்தபட்ட நோய், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கண்டங்கள் ஏற்படும்.


0 கருத்துகள்