சூரிய திசையில் செவ்வாய் புத்தி :
சூரிய திசையில் செவ்வாய் புத்தியானது 4 மாதம் 6நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பகவான் லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ, ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அமைப்பெற்றால் பூமி மனை சேர்க்கை வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை புத்திரர் மற்றும் சகோதரர்களால் அனுகூலம், பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, வியாதிகள் குணமாகி செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
அதுவே செவ்வாய் சூரியன் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றோ, பகை, நீசம் பெற்றோ செவ்வாய் புக்தி நடைப்பெற்றாலும் 8,12 ல் அமைந்து புக்தி நடைபெற்றாலும், பகைவர்களால் கலகம், வண்டி வாகனம் பழுதடையும் நிலை, பூமி மனை போன்றவற்றால் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை, மரணத்திற்கு சமமான கண்டம், வெட்டு காயம் படும்நிலை, ஜீரத்தினால் உபாதை, திருடர் மற்றும் பகைவரால் பிரச்சனை, நெருப்பினால் கண்டம், எடுத்த காரியங்கள் தடைப்படும் நிலை, அரசு வழியில் தண்டனை போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.
0 கருத்துகள்