சூரிய திசையில் சந்திர புத்தி :
சூரிய திசையில் சந்திர புத்தி காலங்கள் 6 மாதமாகும்.
சந்திரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்திலோ, ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்து, சுபர் சேர்க்கை சுபர் சாரம் பெற்று தசாநாதனுக்கு, 5,9 ல் இருந்தால் அணுகூலமான நற்பலன்களைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்கள் நடைபெற்று, புத்திர பாக்கியம் அமையும், பெண்களால் யோகம் தனலாபம் உண்டாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, தோப்பு துறவு பூர்விக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சந்திரன் பலமிழுந்து நீசமாகி பாவிகளுடன் சம்மந்தமாகி சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று திசா நாதனுக்கு 6,8,12 ல் அமையப் பெற்று இருந்தால் மனதில் பயம், குழப்பம், விரோதம், பிரிவு மரணபயம், சிறுநீரக பிரச்சனை, ஜலத்தால் கண்டம், வயிற்று போக்கு வயிற்று வலி, சோம்பல் போன்றவை உண்டாகும். சிறுநீரக கோளாறு ஏற்படும். வயிற்று பிழைப்பிற்கே அல்லாட நேரிடும்.
0 கருத்துகள்