சூரிய தசா புத்தி பலன்கள்
நவ கிரகங்களின் தலைவனாக விளங்க கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்றாலும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகத்தை உண்டாக்குவார். சூரிய திசையானது மொத்தம் 6வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களின் தசா காலங்களிலேயே சூரிய திசை காலங்கள் மட்டும் தான் மிகவும் குறுகிய காலமாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சூரியன் பலம் பெற்று பலமான இடத்தில் அமைந்து திசை நடைபெற்றால் சமுதாயத்தில் மற்றவர்களால் பாராட்டப்பட கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும், பொருளாதார ரீதியாக மேன்மைகளும், பல சமுதாய நலப் பணிகளில் ஈடுபடக்கூடிய யோகம் உண்டாகும்.
சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகங்களான சந்திரன்
செவ்வாய் குரு போன்றவர்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும், அக்கிரகங்களின் சாரம் பெற்றிருப்பதும் சிறப்பான பலனை உண்டாகும்.சூரியன் சிம்மத்தில் ஆட்சியும், மேஷத்தில் உச்சமும், துலாத்தில் நீசம் பெறுவார்
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும், மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும் 8,12 ஆகிய வீடுகளில் அமையப் பெறுவதும், சனி, ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் சாரம் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் அமையப்பெறும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைந்து பலம் இழந்து விடுகின்றன.
ஆனால் சூரியனையே பலமிழக்க வைக்க கூடிய தன்மை ராகுபகவானுக்கு மட்டுமே உண்டு.மேற்கூறியவாறு சூரியன் அமையப்பெற்று அதன் திசை நடைபெறுமேயானால் உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, அரசாங்க வழியில் தண்டனை அடையக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழுந்து சூரியதிசை நடைபெறும் காலங்களில் அனுகூலமற்ற பலன்களை அடைய நேரும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சூரியன் தந்தை, ஆத்மா, பல், வைத்தியம், ஒற்றை தலைவி, மாணிக்கம், ஏகவாதம், யானை, கோதுமை, பால், மிளகு, பகல் காலம் வெளிச்சம், சிவவழிபாடு போன்றவற்றிற்கு காரகனாகிறார்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் சூரிய திசை நடைபெறுமேயானால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தையின் தந்தைக்கு உயர்வுகள் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசிர்வாதம், நோயற்ற வாழ்க்கை தந்தைக்கு மேன்மை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவி, அறிவாற்றல் பேச்சாற்றல் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் அமைப்பு உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் சிறப்பான உடலமைப்பு, கௌரவமான பதவிகளைவகுக்கும் யோகம் பொருளாதார ரீதியாக உயர்வுகள் சமுதாயத்தில் புகழ், பெயர் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு கொடுக்கும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
அதுவே சூரியன் பலமிழந்திருந்து குழந்தை பருவத்தில் சூரியதிசை நடைபெற்றால் ஜீரம், தோல் வியாதி, தந்தைக்கு கண்டம் ஏற்படும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் சோம்பேறி தனம், அரசு வழியில் பிரச்சனை நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு பொருளாதார நெருக்கடி உண்டாகும்.


0 கருத்துகள்