கனவில் நாய் கடித்தால் என்ன பலன்
நாய்கள் என்பவை மனிதர்களின் நண்பனாக விளங்கும் ஒரு உயிரினமாகும் இதை நம் வீட்டின் பாதுகாப்பிற்காக நாம் வளர்த்துகிறோம் சில பேர் பாசத்தாலும் அதன் மீது கொண்ட அன்பினாலும் மிகவும் நேசத்துடன் நாய் குட்டிகளை வாங்கி வளர்த்து வருகின்றனர்.
என்னதான் நாய்க்குட்டிகளை நம் அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அது வளர்ந்த பிறகு அதை எல்லாரையும் கடிப்பது என்பது ஒரு இயல்பான விஷயமாகும் அவ்வாறு நீங்கள் உங்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்றே வைத்துக் கொள்வோம் இருந்தாலும் அந்த நாய் உங்களை கடிப்பது போன்ற கனவுகள் வந்தால் உங்களுக்கு எம்மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
கனவில் நாய் கடித்தால் ரொம்பவும் நல்லது ஏனென்றால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொந்தரவுகள் குடும்பத்தில் ஒற்றுமையின்மை அனைத்துமே நீங்கிவிடும் என்று அர்த்தம்.
உங்களைத் தெருவில் உள்ள ஒரு வெறி நாய் கடிப்பது போல் கனவு வந்தால் கனவு காண்பவருக்கு திடீரென நம்பிக்கை துரோகம் என்ற ஒன்றை வாழ்வில் காணப் போகிறார் என்பதை குறிக்கும் எனவே நீங்கள் ஒருவரையும் நம்பத் தேவையில்லை உங்களுக்கு இந்த தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யலாம் நீங்கள் செய்யும் செயலில் சற்று கவனமாக இருந்தாலே போதும் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வராது.
கனவில் உங்களை ஒரு நாய் துரத்துவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் அனைத்து விஷயங்களிலும் கவனமாக முடிவெடுப்பது முக்கியம் என்பதைக் குறிக்கின்றது.
கருப்பு நாயை கனவில் கண்டுவிட்டால் உங்களுக்கு அது ஒரு தீய சகுனமாகவே அமைகிறது மேலும் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அசம்பாவிதங்கள் நிகழப் போவதை உணர்த்துவதற்காகவே கருப்பு நாய் கனவில் வருகிறது.
உங்கள் கனவில் பிரவுன் நாய் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் திடீர் பிரச்சனை ஏற்படப்போகிறது அந்தப் பிரச்சனையில் எந்த தவறமே செய்யாமல் நீங்கள் சிக்கிக் கொள்ளப் போகிறீர்கள் என்பதை உணர்த்துகின்றது.
உங்கள் கனவில் வெள்ளை நாய் கண்டுவிட்டால் உங்களுக்கு நண்பர்கள் மூலம் பல வகையான நன்மைகள் வந்து சேரும் என்றே எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு உண்மையாகவும் உங்களுடைய கஷ்ட நஷ்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
நீங்கள் நாயை கொல்வது போல கனவுகள் வந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய சூழ்நிலை வரப்போகிறது என்பதை குறிக்கும்.
நாய் கூட்டத்தை கனவில் பார்த்தால் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் குறைந்தபட்ச நேரத்தை ஒதுக்கியாவது அவர்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஏனென்றால் குடும்ப ஒற்றுமைக்கு குடும்பத்தில் உள்ள அனைவருமே சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நாய் கூட்டம் கனவில் வருகிறது உங்களுக்கு குடும்பம் சம்பந்தமாக சில பிரச்சினைகள் ஏற்படும் எனவே நீங்கள் குடும்பத்தினருடன் சற்று நேரத்தை ஒதுக்கினால் உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும் இல்லையென்றால் குடும்பப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
நாய் வீட்டிற்குள் வருவது போன்ற கனவுகளும் நாயுடன் விளையாடுவது போன்ற கனவுகளும் சற்று உங்களுடைய வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
நாய் வீட்டிற்குள் வருவது போன்ற கனவுகளும் நாயுடன் விளையாடுவது போன்ற கனவுகளும் சற்று உங்களுடைய வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
0 கருத்துகள்