சந்திர திசை சந்திர புத்தி :
சந்திர திசை சந்திர புத்தி காலங்களானது 10 மாதங்களாகும்.
சந்திர பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் வளர்பிறை சந்திரனாக இருந்து அவர் 2,11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தாலும் நட்பு கிரக சேர்க்கை, பார்வை சாரம் பெற்றிருந்தாலும் அரசாங்க வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுபகாரியம் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி மனை, வண்டி வாகன, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும். சந்திரனுக்கு குருபார்வையிருந்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
அதுவே சந்திரன் தேய்பிறை சந்திரனாகி பலமிழந்து, பகை, நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கைப் பார்வை பெற்றோ இருந்தாலும் 6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும், பண விரயங்கள் ஏற்படும், மனக்குழப்பங்கள், ஏதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம் கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே பகைமை, அரசு வழியில் தொல்லை, இடம் விட்டு இடம் செல்லக் கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படும்.


0 கருத்துகள்