சந்திர திசையில் செவ்வாய் புக்தி :
சந்திர திசையில் செவ்வாய் புக்தி 7மாதங்கள் நடைபெறும்.
செவ்வாய் பகவான் பலம் பெற்று ஜென்மலக்னத்திற்கும் திசா நாதனுக்கும் கேந்திர திரி கோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், நட்புகிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும் செயற்கரிய செயல்களை செய்யும் வீரமும், விவேகமும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் பெயர் புகழ் உயரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தில் பூமி மனை சேர்க்கை, சகோதர வழியில் அனுகூலம், அரசாங்க வழியில், உயர்பதவிகள், விருதுகள் பெறும் வாய்ப்பு உண்டாகும் நெருப்பு மருந்து சம்மந்தப்பட்ட துறைகளில் லாபம் கிட்டும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
செவ்வாய் பகை நீசமாகி பாவிகள் சேர்க்கை பார்வையுடன் 8,12 ல் அமைந்திருந்தால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, ரத்த காயம் ஏற்படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம், எதிரிகளால் தொல்லை, மனதில் பயம், பணவிரயம், வீடு மனை பூமி வண்டி வாகனங்களால் வீண் விரயம், சகோதரர்களிடையே ஒற்றுமையில்லாத நிலை, அரசாங்கத்திற்கு அபாரதம் செலுத்த வேண்டிய கட்டாயம், தொழிலில் நலிவு, தீயால் சொத்துக்கள் சேதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும், குடும்ப வாழ்விலும் பிரச்சனைகள் உண்டாகும்.
0 கருத்துகள்