சந்திர திசை என்ன செய்யும் :
ஒருவரை கவிஞராக்கும் திறனும் கற்பனை வளம் அதிகரிக்க கூடிய ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு. ரோகினி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் சந்திரனுக்குரியதாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திர திசை முதல் திசையாக நடைபெறும். சந்திரனின் தசா காலங்கள் 10 வருடங்களாகும்.
மாதூர்காரகனாகிய சந்திரன் தாயார், பராசக்தி, சுவையான, விருந்து உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், உடல்நிலை, சீதள நோய்கள், இடதுகண், புருவம், அரிசி, உப்பு, மீன், கடல் கடந்து செல்லும் பயணங்கள், தெய்வீக பணி, மனநிம்மதி, கற்பனை வளம், நிம்மதியான உறக்கம் போன்றவற்றிற்கு காரகனாகுகிறார்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சந்திரனானவர் ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்து திசை நடைபெற்றால் நல்ல மனவலிமை தைரியம், துணிவு, அழகான உடலமைப்பு, மற்றவரை கவரும் பேச்சாற்றல், தாய்க்கு நல்ல உயர்வுகள் உண்டாகும். அதிலும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைய பெற்று திசை நடந்தால் சமுதாயத்தில் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் அமையும். அதிலும் சந்திரன் 12 & ல் இருந்தாலும் 12 & ம் அதிபதியின் சேர்க்கையோ தொடர்போ இருந்தாலும் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு பயணங்களால் அனுகூலம் பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சந்திரன் பகை நீசம் பெற்று அமைந்து சர்ப கிரகங்களான ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் நிலை, தன்னிலை மறந்து வாழகூடிய சூழ்நிலை, ஜல தொடர்புடைய நோய்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு, ஏதிலும் துணிந்து செயல்பட முடியாத நிலை, பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளிடையே பகைமை ஏற்படும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 லும் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 லும் அமைந்தால் நற்பலன்கள் ஏற்படும். அது தேய்பிறை சந்திரனாக இருந்தால் 3,6,10,11 ல் அமைந்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சந்திரன் & குரு சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று திசை நடைபெற்றாலும் இக்கிரகங்களின் நட்சத்திரங்களில் அமைந்து திசை நடைபெற்றாலும் அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.
சந்திரன் பலமாக அமைந்து குழந்தை பருவத்தில் சந்திர திசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், குடும்பத்தில் சுபிட்சம், தாய்க்கு அனுகூலங்கள் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை, பெரியோர்களை மதித்து நடக்கும் பண்பு, சிறந்த பேச்சாற்றல் ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால், சிறப்பான குடும்ப வாழ்க்கை, சமுதாயத்தில் நல்ல கௌரவம் அந்தஸ்து, பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முதுமை பருவத்தில் நடை பெற்றால் நல்ல உடலமைப்பு, தெய்வீக காரிங்களில் ஈடுபாடு மகிழ்ச்சி சந்தோசம் யாவும் அதிகரிக்கும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
அதுவே சந்தின் பலமிழந்து குழந்தை பருவத்தில் நடைபெற்றால் ஜல சம்மந்தபட்ட பாதிப்பு, தாய்க்கு கண்டம் ஏற்படும் இளம் வயதில் ஏற்பட்டதால் கல்வியில் மந்தம் மனகுழப்பம் ஏற்படும். மத்திம வயதில் நடைபெற்றால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை வீண் குழப்பங்கள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கிய பாதிப்பு, ஜல சம்மந்தப்பட்ட நோய்கள், எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை, நீரால் கண்டம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
0 கருத்துகள்