சாப நிவர்த்தி மந்திரம் :
ஆனைமுகனை அனுதினம் மறவேன் அகஸ்தியர் சாபம் நசி நசி பதிணென் சித்தர்கள் சாபம் நசி நசி தேவர்கள் சாபம் நசி நசி மூவர்கள் சாபம் நசி நசி ( மூலிகை பெயர் ) சாபம் முழுவதும் நசி நசி
எந்த ஒரு மூலிகை செடியை எடுப்பதற்கு முன்பாகவும் மூலிகைக்கு சாப நிவர்த்தியும் பிராண பிரதிஷ்டையும் கட்டாயமாக செய்ய வேண்டும்
மூலிகை சாப நிவர்த்தி செய்ய மேற்கண்ட மந்திரத்தை விபூதியும் அருகம்புல்லும் கையில் வைத்து 21 முறை ஜெபித்து மூலிகை மீது போட மூலிகை சாபம் நிவர்த்தி ஆகும்
மூலிகைக்கு சாபநிவர்த்தி செய்த பிறகு கன்னி நூல் காப்பு கட்டி எலுமிச்சை பலி கொடுத்து படையல் வைத்து ஊதுபத்தி கற்பூரம் கொளுத்தி பிராத்தனை செய்ய வேண்டும்
அதன் பிறகு பிராண பிரதிஷ்டை மந்திரம் 21 முறை ஜெபித்து மீண்டும் விபூதி மேலே போட மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும்
அதன்பிறகு தான் மூலிகையை வேர் அறாமல் எடுக்க வேண்டும்
பிராண பிரதிஷ்டை மந்திரம் :
ஓம் மூலி மஹா மூலி
ஜீவ மூலி உன் உயிர்
உன் உடலில் நிற்க சிவா
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்