நம்முடைய youtube channel ல் ஒருவர் ஒரு கமெண்ட் போட்டிருந்தார்
ஐயா பயம் போக மந்திரம் சொல்லுங்க அப்படினு
அவருக்கு இந்த பதிவு
பயம் போக்கும் மூலமந்திரம் :
ஓம் அங் நங் கிலி கிலி 1008 முறை செபிக்க வேண்டும்
சகல விதமான விஷயங்களுக்கும் இந்த பயம் போக்கும் முறையை கையாளலாம் ஒரு தாம்பாள தட்டில் விபூதி பரப்பி அதில் ஓம் என்று
எழுத வேண்டும்
பிறகு விபூதியை வலது கையால் சுழற்றிக்கொண்டே இந்த மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க பயம் போக்கும் விபூதி மந்திரம் சித்தியாகும்
அதன் பிறகு யாருக்கு விபூதி மந்திரித்து கொடுப்பது என்றாலும் இதே முறையில் தாம்பாள தட்டில் விபூதி கொட்டி வைத்து கொள்ளுங்கள்
அதன் நடுவில் ஓம் என்று எழுதி கற்பூரம் கொளுத்தி வைத்து கற்பூரம் அணையாமல் மேற்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த விபூதியை கொடுக்கவும்
சகல விதமான ஏவல் பில்லி சூனியம் காத்து கருப்பு சேட்டைகள் விலகுவதோடு சகல காரியங்களும் கைகூடும் சுகம் உண்டாகும் கைகண்ட முறை
0 கருத்துகள்