Yantra Mantra Tantra ( manthrigam thanthrigam ) - manthrigam - மாந்திரீக பயிற்சி
யந்திர சாப நிவர்த்தி :
ஓம் சக்தி சாபம் நசி நசி
ஓம் சித்தர்கள் சாபம் நசி நசி
ஓம் தேவர்கள் சாபம் நசி நசி
ஓம் மூவர்கள் சாபம் நசி நசி
ஓம் எவரிட்ட சாபமாயினும் நசி நசி
இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி விபூதி கொஞ்சம்
கையில் எடுத்து எந்திரத்தின் மீது போட யந்திரத்தின் சாபம் முழுமையாக
நிவர்த்தி ஆகும்.
நாம் எந்த காரியத்திற்காக யந்திரம் எழுதினாலும் இந்த எந்திர சாப நிவர்த்தி
முறையை செய்யாமல் எவ்வளவு மந்திர உரு ஏற்றினாலும் எந்த
எந்திரங்களும் பலன் தராது.
மேலும் எந்திர சாபத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் ஏதேனும் அஷ்டகர்ம
வேலைகளில் ஈடுபட்டால் அதனுடைய எதிர்வினை அந்த எந்திரத்தை தயார்
செய்முறை திருப்பி தாக்கும் என்பதை சந்தேகம் இல்லை.
அதனால் முதலில் எந்திரத்தின் சாபத்தை நிவர்த்தி செய்து அதற்கு
பிராணபிரதிஷ்டை செய்ய வேண்டும்.
பிராண பிரதிஷ்டை மந்திரம்:
ஓம் யந்திர தேவா உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா
ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா
இந்த மந்திரத்தை எந்திர சாப நிவர்த்தி செய்த பிறகு சிறிதளவு விபூதி கையில்
எடுத்து இந்த மந்திரத்தை மூன்று முறை ஜெபித்து எந்திரத்தின் மீது போட
எந்திரம் உயிர் பெறும் அதன் பிறகே நீங்கள் ஜெபிக்க கூடிய மந்திரம்
எந்திரத்தில் முழுமையாக தங்கும் இந்த இரண்டு முறைகளையும்
கையாளாமல் நீங்கள் எவ்வளவு பெரிய பூஜை செய்தாலும் என்ன
காரியத்திற்காக எந்திரங்கள் எழுதி பிரயோகம் செய்தாலும் முற்றிலும் பலன்
தராது என்பது உண்மை.
ஒரு தகட்டில் எந்திரம் எழுதினால் மட்டும் போதுமானது இல்லை அதற்கான
சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து அதன் பின் சர்வ காரிய சித்தி மையை
சிறிதளவு யந்திரத்தின் நடுவில் வைத்து பிராணபிரதிஷ்டை செய்து அதன்
பின்பு அந்த எந்திரத்திற்கான மூல மந்திரத்தை ஜெபித்தால் மட்டுமே நாம்
வைத்த மையின் சக்தியாலும் எந்திரத்தில் ஏற்பட்ட உயிர்த்தன்மையினாலும்
நாம் ஜெபிக்கும் மந்திரம் முழுமையாக எந்திரத்தில் உருவேறி வேலை
யந்திரம் முழுமையாக வேலை செய்யும்.
for more deatils
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
1 கருத்துகள்
மந்திரம் நீங்கள் உருவாக்கியதா அருமை
பதிலளிநீக்கு