Spiritual Secrets - manthrigam - மாந்திரீக பயிற்சி





Spiritual Secrets - manthrigam - மாந்திரீக பயிற்சி



 மாந்திரீக ரகசியங்கள்:


 எந்திரம் எழுதும் முன்னர் தகட்டை ஒரு முறைக்கு இருமுறை 

சரிபார்த்துக் கொள்ளவும். தகட்டில் எந்த காரணத்தைக் கொண்டும் சிறிய

 விரிசல் கீரலோ சிறிய துளைகளோ அல்லது கசங்கியும் இருக்கக் கூடாது. 


 எந்திரம் வரையும் போது எந்திரத்தை எழுதுவதற்கு முன்பாகவே தேவையான

 அளவை வெட்டிக் கொள்ள வேண்டும் வரைந்த பின்னர் வெட்டக்கூடாது. 



 உதாரணமாக நாம் தாயத்தில் போடக்கூடிய அளவிற்கு எந்திரம் எழுதும்

 போது அதைவிட சற்று பெரிதாக எழுதி விட்டால் தாயத்திற்குள் போட

 முடியவில்லை என்ற காரணத்தினால் எந்திரத்தை வெட்டக்கூடாது எந்திரம்

 எழுதுவதற்கு முன்பாகவே தேவையான அளவு வெட்டி அதன் பின் தான்

 எந்திரத்தை எழுத வேண்டும். 



 எந்திரம் எழுதும் போது நாம் என்ன பிரயோகம் செய்கிறோமோ உதாரணமாக

 வசியம் ஆகர்ஷணம் இந்த மாதிரியான அஷ்டகர்ம வேலைகளை செய்தால்

 அந்த வேலைகளுக்கு உண்டான திசையை நோக்கி அமர்ந்து அதன்பின் இந்த

 எந்திரத்தை எழுத வேண்டும். 



 மேலும் எந்திரம் வரையும் போதே அதற்கு உண்டான மூல மந்திரத்தை

 ஜெபித்துக் கொண்டே எழுதினால்  உடனடியாக அந்த யந்திரம் வேலை

 செய்யும். 



 அடிக்கடி நாம் பயன்படுத்தக்கூடிய எந்திரங்கள் உதாரணத்திற்கு உடல் கட்டு

 தாயத்து ஒரு பாதுகாப்பிற்கு நாம் செய்து தரக்கூடிய வசிய ரக்ஷை உடல்கட்டு

 ரக்ஷை போன்ற நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ரக்ஷைகளை மொத்தமாக

 ஒரு அமாவாசை  அல்லது பௌர்ணமி நாளில்   ஒரு 50 முதல் 100 எந்திரங்கள்

 வரை மொத்தமாக எழுதி தேவையான பொழுது எடுத்து பூஜை செய்து

 பயன்படுத்தலாம். 



 எப்பொழுதுமே  மாந்திரீகத்தை பொறுத்தவரைக்கும் மாம்பலகை

 கட்டாயமாக இரண்டாவது வைத்திருக்க வேண்டும். 



 எந்திரம் எழுதும் போதும் மந்திரங்கள் ஜெபிக்கும் போதும் மாம்பலகையின்

 மீது அமர்ந்து ஜெபித்தால் உடனே வேலை செய்யும். 



 எந்திரத்தை எழுதி அதை மாம்பலகை மீது வைத்து நீங்கள் அமரும் ஆசனமும்

 மாம்பலகையாக இருந்தால் 100% சிறப்பான பலனை  தரும். 



 அதே போல உங்களுடைய பூஜை அறையில் எந்திரங்கள் சுவாமி படங்கள்

 விக்கிரகங்கள் அல்லது தெய்வ வசிய குடுவை முதலிய  அனைத்தும் கிழக்கு

 நோக்கி வைத்திருக்க வேண்டும் பூஜையின்போதும்  மந்திரம் ஜெபிக்கும்

 போதும் எந்திரம் எழுதும் போது யாரிடமும் நாம் செய்யும் வேலையை விட்டு

 முடிக்காமல் பேசக்கூடாது இடை இடையே பேசுவது அல்லது செல்போன்

 உபயோகிப்பது போன்ற விஷயங்கள் கூடாது இதனால் நீங்கள் செய்யக்கூடிய

 காரியம் 100% பலனை தரும் என்று உறுதி கூற முடியாது. 




 மந்திரங்கள் ஜெபிக்கும் போது உங்களுக்கு மட்டும் கேட்கும் படி மந்திரங்கள்

 ஜெபித்தல் நல்லது அப்போதுதான் அபரிமிதமான பலனை கொடுக்கும். 

 மந்திரத்தை ஜெபிப்பதற்கு முன்பாக அந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து

 கொண்டு அதன் பிறகு ஜெபிக்க வேண்டும். 



 சகல விதமான காரியங்களுக்கும் வசிய காரியங்களுக்கு கிழக்கு நோக்கி

 அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். 




 சகல விதமான தெய்வ சக்திகளையும் ஞானத்தையும் பெற உதாரணமாக ஒரு

 வசிய பூஜை தெய்வ வசிய பூஜை அல்லது உபாசனை சித்தி முறையில்

 ஏதேனும் நீங்கள் முயற்சி செய்தால் வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபிப்பது நல்ல

 பலனை கொடுக்கும். 




எதிரிகளை அடக்க ஸ்தம்பன வேலைகள் செய்ய ஒரு ஏவல்  வேலை  போன்ற

 வேலைகளை செய்வதற்கு தெற்கு நோக்கி அதாவது கெடுதல்

 பிரயோகங்களுக்கு தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபிப்பது நல்லது. 




 மந்திரங்கள் உருவேற்ற அதிகாலையில் மூன்று முப்பது முதல் ஆறு

 மணிக்குள் ஜெபிப்பது நல்லது அதேபோல மாலை நேரமாக இருந்தால் ஆறு

 மணிக்கு பிறகு செய்வது நல்லது. 




 அனைத்து விதமான மந்திரங்களை ஜெபிக்க ருத்ராட்ச மாலை பயன்படுத்த

 வேண்டும்  ருத்ராட்ச மாலை பொறுத்தவரைக்கும் உபாசனை அல்லது சித்தி

 முறையை நீங்கள் ஏதேனும் மந்திரங்களை சித்தி செய்வதாக இருந்தால்

 ருத்ராட்சத்தை உங்களை நோக்கியும் பிரயோகம் செய்யும் பொழுது

 வெளிப்புறமாகவும் உருட்ட வேண்டும். 




எந்திரத்தை வரைந்து அந்த எந்திரத்தை பலகை  மீது வைத்து ஒரு எலுமிச்சம்

 பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி எந்திரத்தின் மீது பிழிந்து பலி

 கொடுக்கவும். 


 பிறகு தண்ணீரால்  கழுவி பால் பன்னீர் மஞ்சள் நீர் இளநீர் முதலியவற்றால்

 யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து அதன் பிறகு பூஜை செய்ய வேண்டும்

 இவ்வாறு செய்தால் 100% நாம் எழுதும் யந்திரங்கள் அனைத்தும் பலன்

 கொடுக்கும்





for more details 

MAHA GURU BALAJI

CELL : +91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்